விஜய் உடன் இருக்கும் படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்ரன்..!

Author: Rajesh
29 January 2022, 2:21 pm

நடிகர் விஜய்யின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் வெளியாகி இன்றும் 23 வருடங்கள் ஆகிவிட்டன.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கிய படம் என்றே கூறலாம். ‘குட்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார் விஜய். கல்லூரிப் பெண்ணாகவும்இ கண் இழந்த பெண்ணாகவும் ‘ருக்குமணி’ என்ற பெயரில் வருவார் சிம்ரன்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் எழில் இந்த படத்தை இயக்கி இருப்பார். இந்தப்படம் 1999ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் வெளியானது. இந்த படத்தில் விஜய் பாடல் பாடும், கேபிள் கனெக்ஷன் பையனாக வலம் வந்திருப்பார். மேலும் இந்த படத்தில் மணிவண்ணன், தாமு, வையாபுரி, பொன்னம்பலம், மதன்பாபு, பாரி வெங்கட் (டவுசர் பாண்டி) ஆகிய கதாபாத்திரங்களுடன் படம் கலகலப்பாக இருக்கும்.

கண் தெரியாத நிலையில் தன்னுடனே இருக்கும் விஜய்யை அடையாளம் தெரியாமல், இருக்கும் காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது. இறுதியில், இருவரும் இணைக்கும் காட்சிகள் ரசிகர்கள் ஆவல் அதிகரிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படம் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்ததுடன், கேரளாவில் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி தந்தது. விஜய் சிம்ரன் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்ற பெயரையும் இப்படம் பெற்றுத்தந்தது. இந்தப் படம் இன்றுடன் 23 வயதை எட்டுவதையொட்டி, விஜய் ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்கியுள்ளனர். பலரும் அந்தப் படத்தில் பாடல், வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனை நினைவுபடுத்தும் விதமாக நடிகை சிம்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படம் வெளியாகி இன்றுடன் 23 வருடங்கள் ஆகிறது. இந்த அருமையான வாய்;பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘ப்ரியமானவளே’, ‘உதயா’ ஆகிய படங்களிலும் விஜய்-சிம்ரன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். யூத் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிம்ரன் வந்திருப்பார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 3237

    7

    1