“அதுல நீங்க வந்ததே 2 நிமிஷம் தான்.. எதுக்கு இந்த ஓவர் பில்டப்”.. ட்ரோல்களுக்கு பிக்பாஸ் பிரபலம் பதிலடி..!

Author: Vignesh
21 January 2023, 5:30 pm

அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் பிக்பாஸ் 5ம் சீசனில் போட்டியாளர்களகாக கலந்து கொண்டு காதலிக்க தொடங்கி அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.

அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் அதற்கு பிறகு ஜோடியாக பாடல் ஒன்றில் தோன்றி இருந்தனர்.

amir pavni - updatenews36y0

அதன் பின் அஜித்தின் துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் நடித்து இருந்தனர். இருப்பினும் அவர்களுக்கு படத்தில் பெரிய ரோல் எதுவும் இல்லை என்பதால், ‘நீங்க படத்தில் வந்ததே ரெண்டு நிமிஷம் தான். எதுக்கு ஓவர் பில்டப்’ என அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தற்போது ட்ரோல்களுக்கு இருவரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். “அஜித் சார் படம் என்பதால் கால் வந்ததும் ஒப்புக்கொண்டோம் என்றும், என்ன ரோல், படத்தின் கதை என்ன என்று கூட கேட்கவில்லை.” என தெரிவித்தனர்.

amir pavani - updatenews360

மேலும், “படத்தில் எவ்வளவு நேரம் வந்தோம் என்பதை விட, ஷூட்டிங்கில் அஜித் சார் எங்களை அழைத்து ஒரு மூன்று மணி நேரம் அட்வைஸ் கொடுத்தது தான் எங்களுக்கு பெரிய விஷயமாக நினைக்கிறோம்” என தெரிவித்து இருக்கின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 490

    5

    0