துணிவு படத்தின் டாப் சீக்ரெட்டை உளறிய மஞ்சு வாரியர்.. கடுப்பில் படக்குழு….!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 11:00 am

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குனர் ஹெச்.வினோத் – நடிகர் அஜித் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 11ம் தேதி விஜயின் வாரிசு படத்தின் ரிலீசுக்கு போட்டியாக ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

ajith - updatenews360

சமுத்திரக்கனி, பிரேம், மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் சக்கைபோடு போட்டு வருகிறது. அஜித் இப்படத்திற்காக எந்த ஒரு ப்ரோமோஷன் வேலைகளிலும் ஈடுபடாத நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் பேட்டிகளில் பங்கேற்று துணிவு படம் குறித்து பேசி வருகின்றனர்.

Manju Warrier - updatenews360

அந்த வகையில், நடிகை மஞ்சு வாரியர் ஒரு பேட்டியில் துணிவு படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரகசியத்தை உளறியுள்ளார். ட்ரைலரில் மஞ்சு வாரியர் மிகவும் ஸ்டைலாக ஆக்க்ஷன் சீன்களில் அஜித்துடன் வருவது போல் கட்டப்பட்டிருந்தது. மேலும் கடலில் ஜெட் படகை ஒட்டிக்கொண்டு செல்லும் காட்சிகளும் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருந்தது. இந்நிலையில், இப்படத்தில் ‘கண்மணி’ என்ற பெயரில் நடித்துள்ளதாக மஞ்சு வாரியர் தன் கதாபாத்திரத்தின் பெயரை உளறியுள்ளார்.

முன்னணி பட நடிகர்களின் படத்தில் நடிப்பவர்கள், தங்களது கதாபாத்திரத்தை படம் ரிலீசாகும் வரை ஒருபோதுமே எங்கும் வெளிப்படுத்திவிட கூடாது என்பது அவர்களுக்கு கொடுக்கப்படும் விதிமுறைகளாகும். இப்படி இருக்கும் பட்சத்தில் மஞ்சு வாரியர் தன் கதாபாத்திரத்தை ஒன் லைன் ஸ்டோரியாக விளக்கியது, துணிவு படக்குழுவை அதிர்ச்க்குள்ளாகியுள்ளது. தற்போது மஞ்சு வாரியரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 778

    2

    6