கத்தறவன் கத்தட்டுமே தட்டிவிடு TIME PASS : ரிப்பீட் மோடில் CHILLA CHILLA.. AK ரசிகர்கள் Cheers!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 6:44 pm

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான chilla Chilla பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி அனிருத் பாடிய பாடல் இன்று வெளியானது.

பாடல் வரிகளை கேட்டால் விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குவது போலவும், எதையும் கண்டுகொள்ளாமல் துணிவோடு இருக்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை வழங்குவது போலவும் உள்ளது.

பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் ரசிகர்களை Motivate செய்வது போல அமைந்துள்ளது.

  • Sawadeeka Songஅட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!
  • Views: - 554

    1

    0