ரிலீசுக்கு முன் அஜித்தின் துணிவு படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா?.. இல்லையா?..

Author: Vignesh
9 January 2023, 12:00 pm

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட 2 திரைப்படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் H.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 3ஆவது திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜான் கோக்கென், பவானி ரெட்டி, ஜி பி முத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ThunivuAjith_updatenews360

இப்படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் செம மாஸாக உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

thunivu---updatenews360

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் குஜராத்தில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம் என சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட கதை தான் என பலரும் உறுதி செய்து கூறி வந்தனர்.

இப்படத்தை சென்சாரில் பார்த்த நபர் ஒருவர் தன்னுடைய விமர்சனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

thunivu-updatenews360 3

அதன்படி, அஜித் குமார் தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை என்றும், தனக்கென்று உள்ள தனி பாணியில் நடித்து ஹீரோவாகிய வில்லனாக படம் பார்வர்களை கவருகிறார். துணிவு படத்தில் இடம்பெற்ற ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம் என்றும், நடிகை மஞ்சு வாரியர் கண்டிப்பாக ஒரு சர்ப்ரைஸ் தான்.

தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்க்கிறார் என்றும், நேர்த்தியான காட்சிகள், அஜித்தின் ஸ்டைலிஷ் ஸ்வாக் மற்றும் கைதட்டல்களை அள்ளும் வசனங்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், துணிவு சிறந்த படமாக இருக்கும் என்றும், ஹாலிவுட் லெவலில் துணிவு படத்தை எச். வினோத் எடுத்துள்ளார்.

ajith - updatenews360 2

அதற்க்கு தனி பாராட்டு என்றும், தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத படமாக துணிவு இருக்கும் என்றும், இளைஞர்களை கண்டிப்பாக இப்படம் கவரும் என பதிவு செய்து 3.5/ 5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.

thunivu-updatenews360 3
  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?