ஒரே ஒரு வார்த்தையில் ஆறுதல் சொன்ன அஜித்: நெகிழ்ந்து போன பிரபல பாடலாசிரியர்..! இது தான் காரணமாம்..!

Author: Vignesh
9 December 2022, 7:00 pm

நடிகர் அஜித்குமாரை சந்தித்தது குறித்து பாடலாசிரியர் வைசாக் பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். துணிவு படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

சென்னையில் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்தது. துணிவு படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

ajith - updatenews360

துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் துணிவு படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் துணிவு படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர். துணிவு படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. துணிவு படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

ajith- updatenews360

இந்நிலையில் பாடலாசிரியர் வைசாக், நடிகர் அஜித் குமாரை சந்தித்த தருணத்தை நமது பிரபல சேனலுக்கு பிரத்யேகமான நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில், “படப்பிடிப்பில் அஜித் சாருடன் அமர்ந்த பிறகு, எனது குடும்பம் குறித்து கேட்டார். பாடலாசிரியராக எனது வளர்ச்சி குறித்து கேட்டார்.

முகவரி படத்தின் காட்சிகள் மனதில் வந்தது. கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். அந்த சமயம் உதவியாளர் இன்று எனது பிறந்தநாள் என அஜித் சாரிடம் கூறினார்.

ajith- updatenews360

உடனே அஜித் சார் எழுந்து நின்று கட்டிப்பிடித்து, “ஒன்னுமில்லை வைசாக், இதுக்கு அப்பறம் உங்களுக்கு எல்லாமே.. மேலே போயிட்டே இருப்பீங்க. எதுவும் கவலை படாதீங்க” என அஜித் சார் வாழ்த்தினார்.” என வைசாக் கூறியுள்ளார்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 696

    8

    0