“அதுல நிறைய பேர் இறந்து போயிருக்காங்க தலைவனுக்கு அது தெரில”.. BTS வீடியோவுடன் எச்.வினோத் பகிர்ந்த பகீர் தகவல்..!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 10:00 am

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் மூன்றாவது முறையாக வெற்றி கூட்டணியில் உருவான திரைப்படம் துணிவு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ம் தேதி வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில், மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், தர்ஷன், அமீர், பாவனி, ஜான் கொக்கேன் என ஒரு பட்டாளமே நடித்திருந்தது.

thunivu-updatenews360 3

பிளாக்பஸ்டர் ஹிட் நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் போது நிகழ்ந்து ஒரு சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து இப்படத்தின் படக்குழுவினர் அவ்வப்போது பேட்டிகளில் பங்கேற்று அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் தர்ஷன் நடித்த ரிஸ்க்கான ஷாட் குறித்து எச். வினோத் கூறியுள்ள விஷயம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

அப்போது அவர் கூறியதாவது, “தர்ஷன் 7வது மாடியில் இருந்து குதிப்பது போல எடுக்கப்பட்ட காட்சி மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் இதில் விபத்தில் சிக்கியுள்ளனர். இது குறித்து தர்ஷனுக்கு தெரியவில்லை. ஷாட் சரியாக வரவில்லை என ஒன்ஸ் மோர் கேட்டதற்கு ஈசியாக சரி என ரெடி ஆகிவிட்டார். ஆனால், இந்த மாதிரி எடுக்கப்பட்ட ஷாட்டில் சமீபத்தில் ஒருவர் இறந்துவிட்டார்” என ஷாக்கிங் தகவலை பகிர்ந்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ