“துணிவு 1st Half அஜித் ரசிகர்களுக்காக ” H.வினோத் பேட்டி: ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 4:06 pm

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட 2 திரைப்படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் H.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 3ஆவது திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜான் கோக்கென், பவானி ரெட்டி, ஜி பி முத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ajith -updatenews360

இப்படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் செம மாஸாக உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

Ajithkumar_HVinoth_Updatenews360

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் குஜராத்தில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம் என சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட கதை தான் என பலரும் உறுதி செய்து கூறி வந்தனர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ஹெச் வினோத் கூறியிருப்பதாவது: “வங்கி கொள்ளை என்பது படத்தின் ஒரு பகுதி தான், முழுவதும் கிடையாது. துணிவு படத்தின் 1ஸ்ட் ஆஃப் அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. 2ஆம் பகுதி அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையான பொழுதுபோக்கு படம். அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும்” என்று கூறியுள்ளதாக சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!