பொங்கல் ரேசில் ‘வாரிசு’வுடன் விஜய்யும், ‘துணிவு’டன் அஜித்தும் மோதல் ?.. குஷியில் ரசிகர்கள்..!
Author: Vignesh28 October 2022, 5:00 pm
தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைத்து வருகின்றனர். இவர் கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். அஜித் பைக்கில் ஹிமாலயாவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களால், பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, துணிவு படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே, ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. தொடர்ந்து கடந்த செப் 21ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், பெயரும் வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு ‘துணிவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.
இதற்கிடையே படம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1987ஆம் ஆண்டு நடந்த வங்கிக்கொள்ளையை அடிப்படையாக வைத்துத்தான் துணிவு உருவாகியிருப்பதாக தெரிகிறது.
தீரன் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதேபோல் தற்போது துணிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற களத்தில் வினோத் கிங் என்பதால் துணிவு படம் மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
படம் பொங்கலுக்கு வெளியாகுமென்று அதிகம் கூறப்பட்டாலும் இதுவரை படக்குழுவிடமிருந்தோ, தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தோ அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் பொங்கலுக்கு துணிவு படம் வெளியாவது தற்போது உறுதியாகியிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் துணிவு படத்தின் திரையரங்க உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதேபோல் துணிவு படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வரும் ஜனவரி 12 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளியாகும் என பிரபல இணையத்தளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது ரசிகர்கள் வாரிசு திரைப்படமும் துணிவு திரைப்படமும் வெளியாகும் என சொல்லி வருகின்றனர்.