நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘துணிவு’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. துணிவு படத்துடன் நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வெளியாவதால் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு இல்லாத அளவுக்கு படத்தை தீவிரமாக புரமோட் செய்துவருகிறார்கள் படக்குழுவினர். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு துபாயில் ஸ்கை டைவிங் முறையில் வானத்தில் துணிவு போஸ்டர் பறக்கவிடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வலிமை பட டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் டிரெய்லர் அதனை உறுதி செய்திருக்கிறது.
மேலும் ட்ரெய்லரில் அனல் பறக்கும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. dont act like a hero அந்தவேலையை நான் பாத்துக்கறேன், என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கை வைக்கலாமா? என அஜித் சொல்லும் வசனங்களுக்கு தியேட்டர்களில் கைத்தட்டல்கள் பறக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா படமும், நடிகர் அஜித் குமாரின் வீரம் படமும் வெளியாகியிருந்தது. இரண்டு படங்களும் ரசிகர்களைப் பூர்த்தி செய்த வகையில் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த நிலை இந்த பொங்கலுக்கும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழில் விஜய் தான் நம்பர் 1 நடிகர், நடிகர் அஜித் அதற்கு அடுத்த இடத்தில் தான் இருக்கிறார் என்று கொளுத்திப்போட சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து யார் நம்பர் 1 என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் காரசாரமாக நடைபெற்றன.
இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே இரண்டு படங்களில் எந்தப் படம் வெல்லப்போகிறது, எந்தப் படத்துக்கு அதிக வசூல் கிடைக்கப்போகிறது என உன்னிப்பாக கவனித்துவருகிறது.
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
This website uses cookies.