‘மீண்டும் பிரியாணி.. துணிவால் பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்..?’ ப்ளூ சட்டை மாறன் கிண்டல்… கடுப்பில் ரசிகர்கள்!!
Author: Babu Lakshmanan13 December 2022, 1:17 pm
துணிவுடன் வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் செயலை திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கிண்டலடித்துள்ளார்.
அஜித்தின் அடுத்த படமான ‘துணிவு’ 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன் மோதுவதால், இரண்டு படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் படம் ஒரே நேரத்தில் வெளியாவதால், இந்தப் பொங்கல் பண்டிகை போட்டியான பண்டிகையாகும்.
வினோத் இயக்கத்தில், ‘துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் திரைப்படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விஜய்யின் 66-வது படமான வாரிசு படம், 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு உலகம் முழுவதும் படம் வெளியாகும் என அந்தப் படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் வியாபாரமும் பரபரப்பாக நடந்து வருகிறது. எந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என அது பற்றிய தகவல்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. ‘துணிவு’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால் ‘வாரிசு’ படம் அதிக தியேட்டர்களில் வெளியாகுமா என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது.
இதனிடையே, ‘வாரிசு’ மற்றும் துணிவு படங்களின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி அடுத்தடுத்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளன.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் மீண்டும் இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசியுள்ள நிலையில், மீண்டும் நடக்கும் இந்த சந்திப்பு பல்வேறு விமர்சனங்களையும், கருத்துக்களையும் எழுந்துள்ளது.
அடையாள அட்டை இருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், அவர்களுக்கு விருந்தளிப்பதற்காக மணக்க மணக்க மட்டன் பிரியாணி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் இந்த சந்திப்பை ட்ரால் செய்யும் விதமாக, பிரபல சினிமா விமர்சகரும், இயக்குநருமான ப்ளு சட்டை மாறன் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், மீண்டும் பிரியாணி. துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்? எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.