ட்ரெண்டுக்கு செட்டாகுமா மதகஜராஜா.. முக்கிய பிரபலம் திடீர் கருத்து!

Author: Hariharasudhan
8 January 2025, 3:29 pm

தற்போதையை சினிமா ரசிகர்களுக்கும் மதகஜராஜா படம் பிடிக்கும் என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

சென்னை: கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகு ‘மதகஜராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். விஷால், சந்தானம், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில், “இந்தப் படத்தை எங்களுக்கு அவர்கள் (படக்குழுவினர்) திரையிட்டுக் காட்டினார்கள். இது 10 வருடங்களுக்கு முன்னர் எடுத்த படம். இப்போது செட் ஆகுமா என்கிற மனோபாவத்துடன் தான் படத்தைப் பார்த்தேன்.

ஆனால், படம் இப்போதும் நன்றாக கனெக்ட் ஆகக்கூடிய படமாகத்தான் இருக்கிறது. இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி மற்றும் அஞ்சலி தவிர சதாவும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். மனோபாலாவின் காமெடி மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது. ஆர்யா கேமியோ ரோல் செய்துள்ளார். பாடல்களும் ஃப்ரெஷாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

Tiruppur Subramaniam about Madha Gaja Raja movie to set current mode of Cinema

முன்னதாக, மதகஜராஜா படத்தின் புரோமோஷன் விழாவில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி, “மதகஜராஜா பட வெளியீடு என்று முடிவான உடனே ரொம்பவே பயந்தேன். ரொம்ப வருடங்களுக்கு முன்னால் எடுத்த படம் இது. எனவே, இப்போது வரவேற்பு இருக்குமா என்ற எண்ணம் இருந்தது.

இதையும் படிங்க: தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்… சர்ப்ரைஸ் வைத்த படக்குழு!

ஆனால், சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததில் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவே மிகுந்த நம்பிக்கையைக் கொடுப்பதாக இருந்தது. ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்’ என்று ஒருவர் போட்டிருந்தார். அது என்னவோ உண்மை தான்” எனப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 60

    0

    0

    Leave a Reply