திருப்பூர் சுப்பிரமணியம் கூறியது சாத்தியமா? யூடியூபர்களுக்கு செக்!

Author: Hariharasudhan
19 November 2024, 6:56 pm

கங்குவா பட வரவேற்பு குறைவுக்கு யூடியூப் விமர்சனங்களே காரணம் என்று பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை: பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” இயக்குனர் பாலசந்தரின் ‘வானமே எல்லை’ படம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அதன் 100வது நாள் விழாவை நானே நடத்தினேன். இதே போலத்தான் இளையராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் பிடிக்கவில்லை என்று படித்திருக்கிறேன். ஆனால் அது மக்களுக்குப் பிடித்திருந்தது.

ஒரு படத்தைப் பற்றி ஒவ்வொருவருடைய கருத்தும் மாறுபடும். மேலும், ஒரு தலை ராகம், 16 வயதினிலே, அன்னக்கிளி போன்ற திரைப்படங்களுக்கு முதல் 2 நாட்க சரியான ஓபனிங் இல்லை. ஆனால், அதன் பிறகு ‘நல்லாயிருக்கு’ என்று மக்கள் பேசிப்பேசி, அந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஆனால் இன்று, முதல்நாள் அதிகாலையிலேயே மற்ற மாநிலங்களுக்குச் சென்று படம் பார்த்துவிட்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் விமர்சனம் என்ற பெயரில் யூடியூபர்கள் கூறுகிறார்கள்.

அதற்காக அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை வலியைத் தருகிறது. இந்தியன் 2 மற்றும் வேட்டையன், தற்போது கங்குவா போன்ற படங்களின் வசூல் குறைந்ததற்கு இது போன்ற விமர்சனங்களேக் காரணம். அதற்காக, நன்றாக இல்லாத படங்களைப் பார்க்கச் சொல்லவில்லை. ‘4 காட்சிகள் நன்றாக இல்லை, 4 காட்சிகள் நன்றாக இருக்கிறது’ எனக் கூறினால் கூட பரவாயில்லை.

Tiruppur subramaniam

ஆனால் மொத்த படத்திலும் எது நன்றாக இல்லையோ, அதை மட்டும் பெரிதாகச் சொல்லி, சினிமா என்ற தொழிலையே நாசம் செய்கின்றனர். ஒரு ஹோட்டல் முன் நின்று, ‘இங்க சாப்பிடாதீங்க, சாப்பாடு சுமாராகத்தான் இருக்கும்’ என்று உங்களால் சொல்ல முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், ” கேரளாவில் ஒரு தயாரிப்பாளர், படம் வெளியாகி 2 வாரங்களுக்கு படத்தைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி இருப்பதாக கேள்விப்பட்டேன்.

உதாரணமாக, நம் பொருளைத் தரம் தாழ்ந்து விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. அதனால் நாமும் முதல் 2 வாரத்துக்கு பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என்று தடை உத்தரவு பெற வேண்டும். எனவே, தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்து உள்ள பிரபல யூடியூபர் ப்ளூ சட்டை மாறன், “தியேட்டரில் இருந்துகொண்டே படம் நன்றாக இல்லையென்று பப்ளிக் ரிவியூ தருவது நியாயமா? இதேபோல ஒரு ஹோட்டல் அல்லது துணிக்கடை வாசலில் நின்றுகொண்டு இந்த கடையில் தரம் இல்லை. உள்ளே போகாதீர்கள் என உங்களால்கத்த முடியும் என்று சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் வெங்கடேசன் கூறியதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.சரி. அப்படியென்றால் ஹோட்டல், துணிக்கடை உள்ளிட்டவற்றின் வாசலில் கடை ஊழியர் அல்லது செக்யூரிட்டி.. சாலையில் செல்லும் மக்களிடம் உள்ளே வருமாறு அழைப்பார். அவர்களுக்கு சம்பளம் உண்டு.

இதையும் படிங்க: குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு.. மீண்டும் அரசு மருத்துவமனையின் அவலம்!

ஆனால்.. தியேட்டரில் பப்ளிக் ரிவியூ தந்து பல படங்களை பாராட்டி..அந்த வீடியோ மூலம் பலரை படம் பார்க்க வைத்து உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் மக்களுக்கு..‌ இதுவரை ஒரு ரூபாயாவது தந்து இருக்கிறீர்களா? அப்போது மட்டும் இனித்த பப்ளிக் ரிவியூ…இப்போது மட்டும் கசக்கிறதா?” எனக் கூறியுள்ளார். தற்போது இது தமிழ் திரை உலகில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 223

    0

    0