லியோ படத்துக்கு 5 காட்சிகளே அதிகம்.. : கொளுத்தி போட்ட திருப்பூர் சுப்பிரமணியம்!
Author: Udayachandran RadhaKrishnan17 அக்டோபர் 2023, 8:04 மணி
லியோ படத்துக்கு 5 காட்சிகளே அதிகம்.. தியேட்டரில் இனி ட்ரெய்லர் ரிலீஸ் பண்ணமாட்டோம் : திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பு!
லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. ஐந்து காட்சிகளே எங்களுக்கு போதுமானது. இருப்பினும் படம் ஓடும் நேரம், அடுத்தடுத்த காட்சிகளுக்கு திரையரங்கை சுத்தம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இரவு 1.30 என்பதில், இன்னும் கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைக்கிறோம்.
திரைப்படத்திற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்பது வழக்கத்தில் உள்ள நடைமுறைதான். லியோ படத்தின் மூலமாக அது வெளியில் தெரிந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் நான்கு மணி காட்சிகளை திரையிடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழகத்தில் 1168 திரையரங்குளில், ஒரு சில திரையரங்குகள் டிரைலர் திரையிடும் செயல்களில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.
மேலும் திரையரங்குகளும் ரசிகர்களால் பாதிப்படைகிறது. எனவே இனிவரும் காலங்களில் திரையரங்குளில், டிரைலர் திரையிடுவதில்லை என முடிவு செய்துள்ளோம்.
மேலும் புது நடைமுறையாக பண்டிகை அல்லாத நாட்களில் சிறப்பு காட்சி அனுமதி லியோ திரைப்படத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
0
0