புது அவதாரத்தில் ‘டைட்டானிக்’ பட ஹீரோயின்…செம அப்டேட்டா இருக்கே.!
Author: Selvan20 February 2025, 7:15 pm
இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின்
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக்.
ஒரு கப்பலில் நடக்கும் காதலை மையமாக கொண்டு,காதல் காவியமாக வெளிவந்த இப்படம் 1997ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது மட்டுமில்லாமல் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தது.
இதையும் படியுங்க: ஜீவாவுடன் நடிக்கிற சான்ஸ்-ஆ மிஸ் பண்ண SK..விஜய் டிவி தான் காரணமா.!
மேலும் இப்படத்தில் ரோஸாக நடித்த உலகப்புகழ் பெற்ற நடிகை கேட் வின்ஸ்லட் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.இதுவரை நடிகையாக மட்டுமே ஜொலித்து வந்த இவர்,தற்போது இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்துள்ளார்.
முழுக்க முழுக்க கப்பல்களில் செல்லும் அழகிய காட்சிகள்,மனதை கவரும் காதல் காட்சிகள் என படம் முழுக்க திக் திக் காட்சிகளுடன் செல்லும் கப்பலில்,தன்னுடைய காதலனை பறிகொடுத்து தவிக்கும் காதலியாக வாழ்ந்திருப்பார்.டைட்டானிக் திரைப்படம் மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தாலும்,தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை,நடிப்பில் புது புது வித்தியாசங்களுடன் நடிக்கும் கேட் வின்ஸ்லட் தற்போது ஒரு காதல் கதையை மையப்படுத்தி குட்பை ஜூன் என்ற தலைப்பில் உருவாகும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
மேலும் இப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியிட இருப்பதாகவும் படக்குழு யோசித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கேட் வின்ஸ்லட் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.