டைட்டானிக் குழுவினருக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி; ஜேம்ஸ் கேமரூன் சொன்ன தகவல்,..

Author: Sudha
7 July 2024, 4:26 pm

டைட்டானிக் அவதார் படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவர்களுடைய நீண்ட கால நண்பரும் அவரது படங்களின் முக்கிய தயாரிப்பாளரான ஜான் லாண்டவ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 16 மாத கால போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் காலமானார்.

அவரைப் பற்றி ஜேம்ஸ் கேமரூன் குறிப்பிடும்போது அவதார் குடும்பம் எங்களுடைய தலைவரான ஜான் லாண்டவ்வின் இழப்பால் வருந்துகிறது.அவர் தந்த அக்கறை அவர் கொடுத்த நுண்ணறிவு முற்றிலும் தனித்துவமானது என தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு முதல் தயாரிப்பாளராக இருந்து வருகிறார் ஜான் லாண்டவ். இவர் டிஸ்னியுடன் இணைந்து இரண்டு படங்களை தயாரித்துள்ளார்.

அவதார் படத்தின் அடுத்த பாகத்தை தயாரிககும் வேலையில் முனைப்புடன் ஈடுபட்டு இருந்தார்.

இவர் டைட்டானிக், சோலாரிஸ், அவதார், மற்றும் அவதார்:த வே ஆஃப் ஆப் வாட்டர், ஃபோர் ஏஞ்சல் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.அவரது இறப்பு டைட்டானிக் குழுவினரையும் ஹாலிவுட் பிரபலங்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!