மறைந்து 20 வருஷம் ஆகியும் மனதில் நிற்கும் சௌந்தர்யா – அன்றைய லேடி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் இன்று!

Author: Shree
18 July 2023, 2:30 pm

ஆரம்ப கால திரையப்பயணம்:

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தி வைத்திருந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த சௌந்தர்யா தமிழில் ரஜினிகாந்த், கமல், கார்த்தி, விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்:

குறிப்பாக பொன்மணி, படையப்பா, அருணாச்சலம், தவசி, காதலா காதலா என இவர் நடிப்பில் வெளியான படங்களில் இவரது நடிப்பு இன்றும் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை சௌந்தர்யா, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது தனது பெற்றோர் சொல்பேச்சை கேட்டு அவர்கள் ஆசைக்காக ரகு சாஃப்ட்வேர் எஞ்சினியரை 2003ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

திருமண வாழ்க்கை:

திருமணம் ஆன ஒரு வரிடத்திலே அதாவது, 2004ம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவர் மரணிக்கும்போது கர்ப்பமாக இருந்ததாக செய்திகள் சொல்லப்பட்டது. இந்த மரணத்தில் நிறைய மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது. அப்போதைய அரசுயல்வாதிகளால் அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அரசியல் துவக்கம்:

அப்போது கன்னட சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்த சௌந்தர்யா, அங்குள்ள மக்கள், குழந்தைகள், பள்ளிகள் என பல உதவிகள் செய்துள்ளாராம். அவர் தனக்கென எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளவில்லையாம். சம்பாதித்த பணம் அத்தனையும் மக்களுக்கு செலவு செய்ததால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என கன்னட மக்களே ஆசைப்பட்டார்களாம்.

மர்ம மரணம்:

அதனால் திட்டமிட்டு தான் சௌந்தர்யா கொல்லப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்ததும். மேலும் தீயில் கருகி இறந்தது சௌந்தர்யாவே இல்லை. அவர் உயிரோடு வெளிநாட்டில் சென்று தஞ்சம் அடைந்துவிட்டதாக மக்கள் நம்பினார்களாம். ஆனால், பிறகு அவரின் சவப்பெட்டி தடயவியல் அறிக்கை செய்ததில் அது சௌந்தர்யா தான் என உறுதி செய்தனர்களாம்.

இன்று பிறந்தநாள்:

இந்நிலையில் இன்று நடிகை சௌந்தர்யாவின் பிறந்தநாள். அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று 51வது பிறந்த நாளை கொண்டாடியிருப்பார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது மரணம் இளமையிலே அவரது வாழ்க்கையை பொசுக்கிவிட்டது. இன்றும் நடிகை சௌந்தர்யாவின் மரணத்தை பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காரணம் அவர் அந்த அளவிற்கு அன்றைய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 466

    0

    1