இந்திய சினிமாவில் டாப் நடிகைகளான ஸ்ரீதேவி , ஐஸ்வர்யா ராய் , பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இவர்களை காட்டிலும் அதிக பணமும் புகழும் பெயரும் சம்பாதித்து வைத்திருந்த ஒரே நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஜெ ஜெயலலிதா.
கோடி கணக்கில் சொத்துக்களும் கிலோ கணக்கில் நகை நட்டுகள் , சொகுசு கார்கள் , பங்களா வீடு இப்படி பெரும் பணக்கார நடிகையாக வாழ்ந்து வந்தார் ஜெயலலிதா. இளம் வயதிலேயே பரதநாட்டியம் கற்றுத்தெறிந்தார். அந்த காலத்தில் அதிகம் படித்து சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய ஒரே நடிகையாகவும் மிகத் திறமை வாய்ந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதா பள்ளி படிப்பை படிக்கும்போதே முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார். மேலும் அவர் நடிப்பு துறையிலும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டார். பல மொழிகளைப் பேசி. ஆளுமை மிக்க பெண்ணாக வளம் வந்து கொண்டு இருந்த அவர் இரும்பு பெண்மணி என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலமாக 1965 இல் நடிகையாக அறிமுகமான இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக எம்ஜிஆர் உடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பின்னர் அவருடன் அரசியல் பயணத்தை துவங்கி இரும்பு பெண்மானியாக வாழ்ந்தார். பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி தன்னுடைய 68 வயதில் அவர் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர் வாழ்ந்த போலீஸ் கார்டன் வீட்டில் ஐடி துறை சோதனை செய்தபோது 10,000 மேற்பட்ட பட்டுப்புடவைகள் ,1250 கிலோ வெள்ளி, மற்றும் 28 கிலோ தங்கம் மற்றும் 75 ஜோடிக்கும் மேற்பட்ட செருப்புகள் அங்கே கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் பெரும் பணக்கார நடிகையாக வலம் வந்திருந்தது அதன் மூலம் தெரிய வந்தது. மிகப்பெரிய செல்வந்தம் மிக்க நடிகையாக பார்க்கப்பட்ட அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.90 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.