ரொம்ப டார்ச்சர்… தாங்கவே முடியல : லியோ படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய திரிஷா.. அதிர்ச்சி காரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 2:32 pm

14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்த திரிஷா படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறியதற்கு காரணம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாமவில் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய்யுடன் இணைந்து நடிக்க நடிகைகள் தவமாய் தவமிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் உடன் 2வது முறையாக விஜய் இணைவது உறுதியானது. ஆனால் படத்தின் எந்த தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில் அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழு வெளியிட்டது.

லியோ என டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தில் நடிக்க உள்ள பிரபலங்கள் சமீபத்தில் காஷ்மீருக்கு சென்றனர். இந்த நிலையில் காஷ்மீர் சென்ற 3வது நாளிலேயே திரிஷா பாதியில் திரும்பி வந்துவிட்டார்.

இது தொடர்பான வீடியோ , புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இயக்குநர் செய்த டார்ச்சர், படத்தில் திரிஷா ஒரு சீனுக்குதான் வந்துள்ளார் என பல வதந்திகள் எழுந்தன.

ஆனால் வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக திரிஷாவின் தாய் உமா தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறதாம். அந்த குளிரை தாங்க முடியாததால் நடிகை திரிஷா, டெல்லிக்கு வந்து, அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்தாராம்.

இதையடுத்து தற்போது மீண்டும் காஷ்மீருக்கு கிளம்பி சென்றுள்ளார் திரிஷா. அவர் விமானத்தில் சென்றபோது காஷ்மீர் முழுவதும் பனியால் சூழப்பட்டு இருக்கும் காட்சியை விமானத்தில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த ஒரே பதிவு மூலம் லியோ படத்தில் இருந்து தான் விலகியதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா.

லியோ படக்குழுவினர் காஷ்மீரில் 2 மாதங்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அங்கு தற்போது நிலவிவரும் பனிப்பொழிவின் காரணமாக சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பும் ஐடியாவில் உள்ளார்களாம்.

இதனால் அங்கு காட்சிகளை வேகமாக படமாக்கி வருகிறாராம் லோகேஷ். விரைவில் மிஷ்கினும் லியோ ஷூட்டிங்கில் கலந்துகொள்ள காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?