ஓடிடியில் பார்க்க வேண்டிய முத்தான டாப் 10 படங்கள்… மிஸ் பண்ணாதீங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2024, 6:52 pm

திரையரங்கில் கும்பலாக அமர்ந்து படம் பார்ப்பது ஒருவித கொண்டாட்டம் என்றாலும், வீட்டில் குடும்பத்துடன் படம் பார்ப்பது ஒரு சுகமே.

அதற்குத்தான் தற்போது ஓடிடி உள்ளது. ஓடிடியில் தமிழ் மற்றும் மலையாளம் மொழி படங்கள் உங்கள் பார்வைக்கு..

அதில் காதல், சைக்கோ திரில்லர், விளையாட்டு என கலவையான திரைப்படங்கள் உங்களுக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இதில் பா ரஞ்சித் தயாரிப்பில், ஜெயக்குமார் இயக்கத்தில் உருவான படம் ப்ளு ஸ்டார் (BLUE STAR). அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான இந்த படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியானது

Blue Star Movie Watch

2வது இடத்தில் உள்ள படம் மலையாள மொழியில் 2023 வெளியான கிறிஸ்டோபர். மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் சைக்கோதிரில்லர் மூவியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படமாக அமைந்துள்ளது.

Christopher mammootty

அடுத்த படமாக 2023ல் வெளியான திரைப்படம் ஹர்காரா. ராம் அருண் கேஸ்ட்ரோ இயக்கி அவரே நடித்துள்ள படம். ஆங்கிலேயர் காலத்தில் தபால்காரரின் உண்மை சம்பவத்தை எடுத்துரைத்த படம்.

இந்த வருடத்தில் ரிலீசான திரில்லர் திரைப்படம் ஒரு நொடி. ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம், கொலை, போலீஸ் விசாரணை, அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் என திரில்லராக படத்தை எடுத்திருப்பார் இயக்குநர் மணிவர்மன்.

கூழாங்கல் படத்தை தயாரித்த அதே நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம்தான் ஜமா. பரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ஜமா திரைப்படம் அழிந்து வரும் தெருக்கூத்தை மையமாக வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய படம். பலரது பாராட்டுக்களை பெற்ற இந்த திரைப்படம் பார்வையாளர்களை உருக வைத்துவிடும்.

அடுத்ததாக 2023ல் மலையாளத்தில் வெளியான கிரைம் படம் தங்கம் (Thankam). சஹீத் அராஃபத் இயக்கத்தில் பிஜூ மேமன், வினித் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வெளியான திரைப்படம். சீட் நுனியில் உட்கார வைக்கும் ஒரு அருமையான திரைப்படம்.

நம்ம லிஸ்டுல வரப்போற அடுத்த படம் ரணம் அறம் தவறேல். வித்தியாசமான கதைக்களத்துடன் ஷெரீப் இயக்கிய இந்த படத்தில் வைபல், நந்திதா உட்பட பலர் நடிப்பில் வெளியான படம். நல்ல மிஸ்டரியான திரில்லர் படத்தை அமேசான் Prime மற்றும் Aha ஓடிடியில் பார்க்கலாம்

ஹாட்ஸ்டார் ஓடிடியில் 2023ல் வெளியான திரைப்படம் குட்நைட். காமெடி, ரொமான்ஸ் கலந்து எடுக்கப்பட்ட படம். குறட்டையால் அவதிப்படும் கதநாயகனை (மணிகண்டன்) வைத்து வித்தியாசமான கதையை சொல்லிய படம்.

Good Night

அருமையான கதையை கொண்டது அடுத்த படமான கிடா. ஆடுகளை வைத்து எத்தனை படங்கள் வந்தாலும் கிடா படத்தின் கதை தனித்துவம். காளி வெங்கட், பூ ராமு படத்தின் கதை நாயகர்கள். படத்தை அமேசான் Prime மற்றும் Aha ஓடிடியில் பார்க்கலாம்

கிடா

நம்ம லிஸ்டுல வரப்போற கடைசி படம், மம்முட்டி ஜோதிகா நடித்த காதல் தி கோர். LGBTQ வைத்து ஒரு கெமகா ஸ்டாருக்கு ஏற்ற மாதிரி, மக்கள் ரசிக்கும் வகையில் அழகான கதைக்களத்தை உருவாக்கியிருப்பார் இயக்குநர் ஜியோ பேபி. இந்த படத்தை அமேசான் Prime ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 107

    0

    0