சன் டிவியை மிஞ்சும் விஜய் டிவி.. இந்த வாரம் முதலிடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?
Author: Udayachandran RadhaKrishnan21 February 2025, 4:28 pm
சீரியல்களில் எந்த சேனல் முதலிடம் என்பதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ இடையே எப்போதும் போட்டி இருக்கும். ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டிஆர்பி தான் இதை முடிவு செய்கிறது.
இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்து முதலிடத்தை பிடித்த சீரியல்களில் எது என ஒவ்வொரு வாரமும் டிஆர்பி வெளியாகும். இந்த வருடத்தின் 7வது வாரம் எந்த சீரியல் முதலிடம் பிடித்துள்ளது என்பதை பார்ப்போம்.
இதையும் படியுங்க: ஹாட்ரிக் வெற்றியை ருசித்தாரா தனுஷ்…’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் விமர்சனம்.!
வார வாரம் சன்டிவி சீரியல் தான் எப்போதும் முதலிடம். அதன் படி இந்த வாரமும் சன் டிவி சீரியல் தான் பிடித்துள்ளது. ஆனால் சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை மூன்று முடிச்சு சீரியல் பிடித்துள்ளது.தொடர்ந்து 3வது இடம் கயல் சீரியலும், 4வது இடத்தை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலும் பிடித்துள்ளது.

5வது இடத்தில் சன்டிவியின் மருமகள் சீரியலும், 6வது இடத்தில் அன்னம் சீரியலும், 7வது இடத்தில் எதிர்நீச்சல் 2 சீரியலும் பிடித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 8வது இடத்தை பிடித்துள்ளது.

அதே போல பாக்கியலட்சுமி சீரியல் 9வது இடத்திலும், கடந்த வாரம் முன்னிலையில் இருந்து ராமாயணம் சீரியல் பின்தங்கி 10வது இடத்திலும் உள்ளது. சன் டிவி சீரியல்களே பெரும்பாலான இடங்களை பிடித்துள்ளது என்றாலும், சிறகடிக்க ஆசை டாப் 5 இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.