2024-ல் மிரட்டிய TOP 5 வில்லன்கள்…கோடிகளை அள்ளிய பிரபல நடிகர்கள்..!

Author: Selvan
12 December 2024, 6:58 pm

தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமாவிலேயே வில்லன் கதாபாத்திரங்களுக்கு தனி இடம் இருந்து வருகிறது.ஹீரோக்களுக்கு இணையாகவே வில்லன்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

இதனால் வில்லன் நடிகர்களின் சம்பளம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு வில்லனாக நடித்த 5 முக்கிய நடிகர்களின் சம்பளம் பற்றிய தகவல்கள் இதோ..!

Kamal Haasan villain Kalki 2898 AD

கல்கி 2898 AD – கமல்ஹாசன்

இந்திய சினிமாவின் உலக நாயகனாக மிளிரும் கமல்ஹாசன், கல்கி 2898 AD படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் 10 நிமிடக் காட்சிக்காக கமல்ஹாசன் ரூ.20 கோடி சம்பளமாக பெற்றார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: “குட் பேட் அக்லி”….ரசிகர் கேட்ட கேள்வி…ஜி.வி.பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்…இணையத்தில் கலக்கல்..!

தேவாரா – சைப் அலிகான்

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கொரட்டல சிவா இயக்கிய தேவாரா திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வில்லனாக நடித்தார். அவருக்கு இக்கதாபாத்திரத்திற்காக ரூ.12 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் பான் இந்தியாஅளவில் சைப் அலிகான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Saif Ali Khan villan Devara


சைத்தான் – மாதவன்

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட மாதவன், வித்தியாசமான கதைகளில் நடிக்க விரும்புகிறார். அதற்கு சிறந்த உதாரணம் சைத்தான் திரைப்படம். வில்லனாக நடித்த இப்படத்தில் மாதவனுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Madhavan villan Saithan movie


புஷ்பா 2 – பகத் பாசில்

சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படம் ரூ.1000 கோடி வசூலை அடைந்துள்ளது. இதில் பகத் பாசில் வில்லனாக நடிக்க ரூ.8 கோடி சம்பளமாக பெற்றார். இவர் முதல் பாகத்தில் 3 கோடி சம்பளமாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Fahadh Faasil salary Pushpa 2


கங்குவா – பாபி தியோல்

சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல், தனது கதாபாத்திரத்திற்காக ரூ.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் . ரசிகர்கள் மத்தியில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாபி தியோலின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

Bobby Deol villan Kanguva


வில்லன்களின் அசுர சம்பள உயர்வால்,தற்போது இந்திய சினிமாவில் பல ஹீரோக்கள் வில்லன் கதாபாத்திரத்திற்கு இறங்கியுள்ளனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!