பணக்கார வீட்டுப் பெண்ணை வளைத்து போட்ட 6 ஹீரோக்கள்.. அதுலயும் அவரோட மனைவி வேற லெவல்..!

Author: Vignesh
1 August 2023, 11:00 am

பல சினிமா நட்சத்திரங்கள் உச்சம் தொட்டு மிகப்பெரிய உயரத்தை அடைந்திருந்தாலும், அவர்களுடைய திருமண வாழ்க்கை என்று வரும் பொழுது அதை பெற்றோர்களின் கையிலே விட்டிருக்கிறார்கள். பெரும்பாலும், இவர்கள் பொருளாதார அளவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்களை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் காதல் திருமணமாக இருந்தாலும், பணக்கார பெண்களை தான் வளைத்து போட்டு இருக்கிறார்கள். அப்படி கோடீஸ்வர பெண்களை வளைத்து போட்ட ஆறு நடிகர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆர்யா -சாயிஷா

aarya sayeesha

தமிழ் சினிமாவில் பிளே பாய்யாக ஆட்டம் போட்டு வந்த ஆர்யா, திருமணம் என்று வந்தவுடன் அதற்கு ஏற்றார் போல் பெண்ணை பார்த்து காதல் வலையில் வீழ்த்தி கல்யாணம் செய்து கொண்டார். இவருடைய கல்யாணம் நடிகையான சாயிஷா உடன் நடைபெற்றது. இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பவர் சாயிஷா. இவருடைய அப்பா அம்மா இருவருமே பாலிவுட்டில் மிகப்பெரிய புள்ளிகள் என்று சொல்லலாம். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆக இருந்த திலீப் குமார் தான் சாய்ஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபு -லட்சுமி

vikram prabhu-updatenews360

நடிகர் விக்ரம் பிரபு 20 வயதிலேயே லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரது மாமனார் நடிகர் பிரபுவுக்கு நெருங்கிய நண்பர். சேலத்தில் உள்ள எஸ் எஸ் எம் என்ற மிகப்பெரிய கல்லூரியின் நிறுவனர் விக்ரம் பிரபுவின் மாமனார். இவர் காதலில் விழுந்தாலும், பெரிய இடத்து பெண்ணாகத்தான் வளைத்து போட்டு உள்ளார் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

அருண் விஜய் ஆர்த்தி மோகன்

arun vijay-updatenews360

பல வருடங்களாக சினிமாவில் ஜெயிக்க போராடி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய். இவர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தான் செய்து கொண்டார். ஆனால், இவர் திருமணம் செய்துள்ள இவரது மனைவி மிகப் பெரிய தயாரிப்பாளரின் மகள். ஒரு கட்டத்தில் அருண் விஜயை தூக்கி விட அவருடைய மாமனார் தொடர்ந்து மாஞ்சா வேலு, மலை மலை போன்ற படங்களை தயாரித்திருந்தார்.

ஜெயம் ரவி -ஆர்த்தி

jayam ravi wife aarthi - updatenews360

ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, சினிமா நடிகர் நடிகைகளை காட்டிலும், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கு ரசிகர்கள் அதிகம் என்று சொல்லலாம். இவர்கள் என்னதான் காதல் திருமணம் செய்து கொண்டாலும், ஜெயம் ரவி திருமணம் செய்துள்ள ஆர்த்தியின் தந்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் ஆவார். இவர் பெரிய புளியங்கொம்பை தான் பிடித்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது. மேலும், ஆர்த்தியின் தாய் சின்னத்திரை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் -சங்கீதா

sangeetha vijay - updatenews360

தற்போது மாஸ் ஹீரோவாக இருந்து வரும் விஜய் ஒருகால கட்டத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பொழுதே சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில், இருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவர்கள். இவருடைய அப்பா லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். மேலும், இலங்கையிலும் இவர்களுக்கு பல கோடி கணக்கில் சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி- ரஞ்சனி

Ranjini-Karthi -updatenews360

நடிகர் கார்த்தி தன் அண்ணன் சூர்யாவை போன்று இல்லாமல் அவருடைய நெருங்கிய உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டார். சூர்யாவின் திருமணம் காதல் திருமணம் என்பதால் கார்த்தியின் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது சிவகுமாரின் மிகப்பெரிய ஆசையாக இருந்ததை பல மேடைகளில் பேசி இருப்பார். அதேபோல், மகன் கார்த்தியும் அதை நிறைவேற்றும் காட்டி இருந்தார். இருந்தாலும், இவர் திருமணம் செய்திருக்கும் ரஞ்சனியின் அப்பா ஈரோட்டில் மிகப்பெரிய தொழிலதிபர். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கிறதாம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 435

    2

    0