இயக்குனர் வெங்கட் பிரபுவை காணவில்லை.. வில்லன் நடிகர் போட்ட பதிவு..! ஓஹோ அதுதான் விஷயமா?

Author: Vignesh
30 January 2024, 9:21 am

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடந்து வர அவரது சகோதரியும் பாடகியமான பவதாரிணி தற்போது உயிரிழந்துள்ளார். இது அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

vp-kichasudeep

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு இப்போது விஜய் வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அண்மையில், கிச்சா சுதீப் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார். அப்போது, ஒரு ரசிகர் நீங்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருந்த படம் என்ன ஆனது? என்று கேட்க அதற்கு வெங்கட் பிரபுவை காணவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 301

    0

    0