கொழுகொழுவென இருக்கும் இந்த குட்டி பையன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Author: Vignesh
26 February 2024, 9:36 am

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம்.

அந்தவகையில், பிரபல நடிகரின் மகனின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் – சங்கீதா தம்பதியின் மகன் சஞ்சயின் குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது, நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் சமீபத்தில், லைக்கா நிறுவனத்தின் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலானது. இப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!