சூர்யாவுடன் 3வது முறையாக இணையும் டாப் நடிகை.. சம்பவம் செயயும் RJ பாலாஜி!
Author: Udayachandran RadhaKrishnan20 November 2024, 2:16 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா. அண்மையில் இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதையடுத்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 44. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து வரும் சூர்யா 45. இந்த படத்தை RJ பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளி வராமல் இருந்த நிலையில், தற்போது உடன் நடிக்கும் நடிகையின் பெயர் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: வீட்டை விட்டு வெளியேறிய மகள் திடீர் கர்ப்பம்.. மனமுடைந்த பாக்யராஜ்!
நடிகை திரிஷாதான் சூர்யாவுடன் நடிக்க உள்ளார். ஏற்கனவே மௌனம் பேசியதே, ஆறு படங்களில் திரிஷா நடித்திருந்தார். மன்மதன் அம்பு படத்தில் ஒரு பாடலில் சூர்யவுடன் நடனமாடியிருப்பார்.
தற்போது இந்த தகவல் சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த கூட்டணிக்கு நிச்சயம் வெற்றி தான் என ரசிகர்கள் இப்போதே பேசத் தொடங்கியுள்ளனர்.