நல்லா உத்து பாருங்க… இது யாருன்னு தெரியுதா? டாப் ஹீரோயினை அடையாளம் கண்டு வியக்கும் ரசிகர்கள்!

Author: Shree
22 May 2023, 12:59 pm

சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்று டாப் பிரபலங்களாக இருப்பவர்கள் கைக்குழந்தையாக இருக்கும் பழைய போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

அந்தவகையில் தற்போது பப்ளி லுக் அழகில் கை குழந்தையாக கீர்த்தி சுரேஷ் தன் அம்மாவின் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். தற்போது தெலுங்கு, தமிழில் முனன்ணி நடிகையாக இருந்து வருகிறார்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1019

    8

    2