Pandian Stores 2 சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை..-இனி அவருக்கு பதில் இவரா?..

Author: Vignesh
13 April 2024, 1:35 pm

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலம். அதுவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இல்லத்தரசிகளை விட இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர்.

Pandian-Stores

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

இரண்டாம் பாகத்தில் புதிய நடிகர்கள் பலரும் நடிக்க பாண்டியன் ஸ்டோர் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் தந்தை மகன்களை பற்றிய கதையாக அமைந்துள்ளது. தற்போது, கதையில் திருமண நிகழ்வு நடந்து வருகிறது. இந்த தொடரில் ராஜியின் சித்தியாக ரிஹானா நடித்து வந்தார். ஆனால், திடீரென சில காரணங்களால் அவர் வெளியேற அவருக்கு பதிலாக தற்போது நடிகை மாதவி நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: கல்யாணம் செய்யாமல் இளமையை கடந்த கோவை சரளா.. யார் காரணம் தெரியுமா?..

சீரியல் இருந்து விலகியது குறித்து ரிஹானா கூறுகையில், எனது தனிப்பட்ட காரணங்களால் தான் இந்த தொடரில் இருந்து வெளியேறினேன். கதைப்படி, இந்த சீரியலில் கேரக்டர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதால் என்னால் பிரேக் எடுக்க முடியவில்லை. இதனால், தான் சீரியல் இருந்து விலக வேண்டியது ஆனது என கூறியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 379

    0

    0