பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய பிரபலம்..-இனி அவருக்கு பதில் இவரா?
Author: Vignesh27 May 2023, 7:30 pm
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலம். அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இல்லத்தரசிகளை விட இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர்.
டாப் சீரியல்கள் விஜய் டிவி லிஸ்டில் எடுத்தால் அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வந்துவிடும், அந்த அளவிற்கு அழகான சீரியலாக மக்களால் கொண்டாடப்படும், இந்த தொடர் கடந்த சில வாரங்களாக முடிவுக்கு வரப்போகிறது என்று கூறப்பட்டு வருகிறது. கதை என்னவோ பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவது போல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை.
இந்த நேரத்தில் அதிக ரசிகர்களை கொண்ட குழந்தை நட்சத்திரம் கயல் பாப்பா தான் தொடரை விட்டு விலக இருக்கிறாராம். கயலின் உண்மையான பெயர் ஹாசினியாம், இவர் சீரியலில் மிகவும் கியூட்டாக நடித்த ஒரு குழந்தை என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தநிலையில், கயலின் அம்மா ஒரு பேட்டியில், ஹாசினி தொடரில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அவருக்கு பதில் அவரது அக்காவை நடிக்க கேட்டுள்ளதாகவும், கயலின் அக்காவும் நடிப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். கியூட்டான கயல் பாப்பா சீரியலில் வர மாட்டாரா என்பதை கேள்விப்பட்ட ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.