முட்ட முட்ட கண்ணோடு கியூட்டாக இருக்கும் இந்த பாப்பா யாருன்னு தெரியுதா? இவங்க தான் 80s கனவுக்கன்னி..!
Author: Vignesh13 December 2023, 9:15 am
பொதுவாக சினிமாவில் படங்களை தாண்டி சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் அதிகப்படியாக ட்ரெண்ட் ஆகிறது என்றால், அது பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் தான் என்று சொல்லலாம். அந்த வகையில், நடிகை தனது அம்மாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் அந்த நடிகை முட்ட முட்ட கண்களுடன் செம க்யூட்டாக காணப்பட்டுகிறார். இவர் தமிழகத்தில் இல்லை திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். 80களில் இருந்த பிரபலங்களின் ரீ யூனியனில் எப்போதும் கலந்துகொள்வார். இவ்வளவு விவரம் பார்த்து உங்களுக்கு இந்த நடிகை யார் என்று கண்டிப்பாக தெரிந்திருக்கும் அவர் வேறு யாரும் இல்லை, 80s கனவுக்கன்னி நதியாவின் சிறு வயது புகைப்படம் தான்.
80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.