தமிழ் சினிமாவின் டாப் 5 இராணுவப் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Author: Hariharasudhan
8 November 2024, 6:07 pm
Quick Share

அமரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் நிலையில் , தமிழ் சினிமாவில் ராணுவத்தை மையப்படுத்தி இதுவரை வெளியான சிறந்த படங்களைக் காணலாம்.

சென்னை: நம்மில் பலருக்கு தேடல் அதிகமாக இருக்கலாம். அதிலும், சினிமா குறித்த தேடல் என்றால் பலருக்கும் ஒரு இனம் புரியாத ஆர்வம் எங்கிருந்து வருமோ என்னவோ, உடனடியாக வரும். அப்படிப்பட்ட ஒரு உணர்வை தற்போது தமிழ் சினிமாவில் வெளியான அமரன் திரைப்படம் தந்திருக்கிறது எனலாம்.

ஏனென்றால், தமிழ் சினிமாவுக்கே உரித்தான குடும்ப சென்டிமென்ட், தேசப்பற்று, ஹீரோயிசம் என அனைத்திலும் பங்கு போட்டு கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. அதனை சரியான வகையில் நம்மில் கடத்தியுள்ளனர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி உள்ளிட்ட கதாபாத்திரங்கள்.

இப்படி படிக்கும்போதே இப்படத்தை பார்க்காதவர்கள் கூட பார்த்துவிடலாம் என்ற நினைப்பு வந்திருக்கலாம். இதோ, உங்களுக்காக தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் தலைமுறையினரும் பார்க்க வேண்டிய 5 ராணுவத்தை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்கள் குறித்தான ஒரு சிறிய தொகுப்பு.

துப்பாக்கி: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் மற்றும் சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ஹாரிஸ் தனது பின்னணி இசையால் மிரட்டி இருந்தார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் விஜய், விடுமுறைக்கு வந்த இடத்தில் மக்களுடன் மக்களாக, சக மனிதராக உள்ள தீவிரவாத கும்பலை எப்படி முழுவதுமாக பிடிக்கிறார் என்பதே கதை. ஸ்லீப்பர் செல்ஸ் என்ற புதுமையான வார்த்தையா பதத்தை பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஒரு சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதையில் ராணுவம், தேசப்பற்று, காதல், குடும்பம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தேவையான அனைத்தும் இதில் இடம் பெற்றிருக்கும்.

விஸ்வரூபம்: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு கிளாசிக் நடன ஆசிரியராக இருக்கும் கமல்ஹாசன், ராணுவ அண்டர் கிரவுண்ட் அதிகாரியாக எப்படி செயல்படுகிறார், தீவிரவாதக் கும்பலை எவ்வாறு கையாள்கிறார் என்பதே மீதிக் கதை. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், தேசப்பற்று என்ற ஒற்றை கருதுகோளை ஏந்தி, கமலுக்கே உரித்தான டெக்னாலஜி பக்கம் புகுந்து விளையாடி இருப்பார். இப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது.

Thuppakki

ஆரம்பம்: 2013ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார், ஆர்யா, டாப்சி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் திரைப்படம் ஆரம்பம். விருப்ப ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அஜித்குமார், சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு தனது இராணுவ பாணியில் களமாடி வெற்றி வாகை சூடுகிறாரா என்பதே கதையம்சம். இப்படத்தின் பாடல்கள் ஹிட் ஆனது. மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித்குமாருக்கு அறிமுக பாடல் நல்ல வெற்றியைத் தந்த படமாகவும் ஆரம்பம் அமைந்தது.

இதையும் படிங்க: தாயின் அழுகையை மறந்த அமரன்.. கோபி நயினார் விமர்சனம்!

கேப்டன்: ஆர்யாவின். கட்டுடல் மேனிக்கு ஏற்றார் போன்ற திரைக்கதையைக் கொண்ட படமாக இது அமைந்தது. 2022ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், ஒரு ஆர்மி கேப்டனாக செயல்படும் ஆர்யா, தனது குழுவை எவ்வாறு சிறப்பாக வழிநடத்தி தீவிரவாதக் கும்பலை பிடிக்கிறார் என்பதே கதை. இப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும், கட்டாயம் பார்க்க வேண்டிய தமிழ் சினிமாவின் இராணுவப் படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அமரன்: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் படமாக இப்படம் அமைந்துள்ளது. அதேநேரம், அரசியல் ரீதியாக ஒருபக்கம் நல்ல விமர்சனங்களையும், மறுபக்கம் சினிமா இயக்குனர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 56

    0

    0

    Leave a Reply