அதுக்கு நீ தகுதியே இல்ல… REJECT செய்த முன்னணி ஹீரோக்கள் REVENGE எடுத்த வாணி போஜன்!

Author: Rajesh
10 February 2024, 6:59 pm

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

vani bhojan-updatenews360

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

vani bhojan-updatenews360

இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆரம்பத்தில் தான் ஒரு சீரியல் நடிகை என்பதால் தன்னுடன் நடிக்க மறுத்த ஹீரோக்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது, கதை கேட்டுவிட்டு ஒப்பந்தம் செய்யும் நேரத்தில் நிறைய டாப் ஹீரோக்கள் அவங்க சீரியல் நடிகை சினிமாவுக்கு செட் ஆகமாட்டாங்க… Aunty மாதிரி தான் பீல் ஆகும் என கூறி நிறைய பேர் என்னை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க.

அப்போதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கும். அப்படி ஒரு நேரத்தில் விதார்த் உடன் ரொம்ப ஸ்ட்ராங்கான ரோல் ஒன்றில் நடித்தேன் அதன் பின் என்னை தேடி வந்து நிறைய பேர் வாய்ப்பு கொடுத்தார்கள். அப்போது என்னை ரிஜெக்ட் செய்த சில ஹீரோக்களின் படங்களை நான் மறுத்துவிட்டுடேன். திறமைக்கு மரியாதை தரணும். என்னுடைய திறமைக்கு மதிப்பு தராத அவர்களுடன் நடிக்க நான் விரும்பவில்லை. எனக்கும் மரியாதை ரொம்ப முக்கியமான விஷயம் என்று வாணி போஜன் அந்த பேட்டியில் கூறினார்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu