சிறுவயதில் ‘கொழுக்-மொழுக்’ என்றிருக்கும் சீரியல் நடிகை! யாரென்று தெரிகிறதா?

Author: Vignesh
14 March 2024, 6:12 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

serial-actresses

ஆனால் இவர் வெள்ளித்திரை நாயகி இல்லை சின்னத்திரை நாயகிதான். இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. இவரின் சிறுவயது போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவருமே இவர் யார் என்று கண்டுபிடித்து விட்டார்கள். யார் அந்த சீரியல் நடிகை தெரியுமா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே , தென்றல் வந்து என்னை தொடும் தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ள பவித்ரா தான்.

இவர் கடைசியாக தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் நடித்தவர். அதன் பிறகு, எந்த தொடரிலும் கமிட் ஆகவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாகவே தற்போது வரை உள்ளது. அவர் விரைவில் புதிய தொடர் குறித்து ஏதாவது அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 185

    0

    0