கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் வில்லன்; கடுப்பாகும் ஹீரோ – ஒன் 2 ஒன் மோதல்
Author: Sudha1 July 2024, 6:01 pm
சுந்தர் சி இயக்குனராக மட்டும் அல்லாமல் நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்துவதில் வல்லவர்.அவருடைய இயக்கத்தில் அரண்மனை 4 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவேற்பை பெற்றது
இப்போது சுந்தர் சி நாயகனாக நடிக்க மஹாராஜா படத்தில் வில்லனாக மிரட்டிய அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ஒன் 2 ஒன்.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.
இருவருக்குமான போட்டிதான் கதைக்கருவோ என தோன்றுகிறது.
அதன்படி சுந்தர் சி வில்லனை தேடி அலைவதும் வில்லன் அவருக்கு போக்கு காட்டும் காட்சிகளும் காட்டப்படுகிறது.
ஆண்டவனே நல்லவன் பக்கம் தான் இருப்பாரு. தோல்வியே இருந்தாலும் முயற்சி செய்யாமல் விடமாட்டேன் போன்ற பஞ்ச் வசனங்களும் இருக்கிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதியின் குரலும் வருகிறது.எனவே அவர் கெஸ்ட் ரோலில் வருவாரா என எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
கே ஞானம் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.