ட்ரெண்டிங்கில் நம்பர் 1 : YouTube-ஐ அடித்து நொறுக்கிய துணிவு!!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2022, 6:36 pm
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், கடந்த 10ஆம் தேதி ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் ‘சில்லா சில்லா’ பாடல் வெளியான 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை படைத்தது.
இதையும் தாண்டி தற்போது 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் யூடியூபில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தில் வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.