அத்துமீறி நுழைந்தால் சுட்டுத்தள்ளுவேன் – கங்கனா ரனாவத் வீட்டு வாசலில் எச்சரிக்கை பலகை!

Author: Shree
18 March 2023, 2:31 pm

அனுமதி இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தால் சுட்டுத்தள்ளுவேன் என நடிகை கங்கனா ரனாவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை கங்கனா ரனாவத் அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பாய்காட் பாலிவுட்டில் இருந்து தனக்கு கொடுக்கும் டார்ச்சர்களையெல்லாம் தனியாளாக எதிர்த்து நின்று போராடி வருபவர் கங்கனா.

சில வருடங்களுக்கு முன்னர் உத்தவ் தாக்கரே ஆட்சியில் இருந்தபோது இவரது வீட்டை சட்ட விரோதமாக கட்டியிருப்பாதக கூறி இடித்து தள்ளினர். தற்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி வந்திருப்பதால் மீண்டும் தன்னுடைய வீட்டை கங்கனா புதுப்பித்து கட்ட தொடங்கி இருக்கிறார்.

அத்துடன் தன் வீட்டின் வாசலில் அறிவிப்பு பலகையில், “அத்துமீறி உள்ளே நுழைந்தால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன். ஒருவேளை துப்பாக்கி சூட்டில் தப்பித்தால் மீண்டும் சுடுவேன் என்ற எச்சரிக்கை பலகை வைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!