மன்சூர் அலிகான் விஷயத்தில் பொங்கிய த்ரிஷா.. இப்போ எங்க போச்சு உங்க ரோசம்.. நெட்டிசன்கள் கேள்வி..!

Author: Vignesh
4 December 2023, 11:15 am

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, அவரது பேச்சுக்கு நடிகை த்ரிஷா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. அதன்பேரில் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

mansoor ali khan

இதையடுத்து, அதன் பின் மன்சூர் அலிகான் திரிஷா விட மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு திரிஷா தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பதே புனிதம் என்று பதில் அளித்து இருந்தார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் குறித்து த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.

இந்நிலையில், காவல்துறையின் கடிதத்திற்கு திரிஷா பதில் அளித்துள்ளார். அதில் அவர், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று திரிஷா தெரிவித்து இருந்தார்.

animal - updatenews360

மேலும், இதுவரை இவரைப் போன்ற ஒருவருடன் நடிக்காதே நல்லது என்று தெரிவித்திருந்தார். இனியும் வாழ்க்கையில் மன்சூர் அலிகான் உடன் நடிக்க மாட்டேன் என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், இந்தியில் ரன்பீர் கபூர் ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த அனிமல் படத்தை த்ரிஷா பாராட்டி இருக்கிறார். முழுக்க முழுக்க ஆண்களின் வன்முறைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அனிமல் படத்தை த்ரிஷா Cult என்று விமர்சனம் கூறியுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்க அதோடு இப்போ உங்களுக்கு ரோஷம் இல்லையா என கேட்க அவர் உடனே அந்த போஸ்ட்டை டெலிட் செய்து விட்டார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 324

    0

    0