அடுத்த CM அவங்க தான்.. நடிப்பை தாண்டி அரசியலில் ஸ்கோப் இருக்கு… நடிகையின் எதிர்காலம் குறித்து ஆருடம் கூறிய சூர்யா..!
Author: Vignesh25 March 2023, 1:00 pm
தமிழ் முன்னணி நடிகையான திரிஷா கடந்த 23 ஆண்டுகளாக முன்னனி நடிகை என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார். இவர் அவ்வப்போது காதல், திருமணம், காதல் தோல்வி என சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
தற்போது 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சை கிளப்பி வரும் ஏ எல் சூர்யா என்பவர் திரிஷா என் மனைவி தான் என்று கூறி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்து அதிர்ச்சியளித்தது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அது மட்டும் அல்லாமல் நடிகர் விக்ரம் சீக்கிரம் இறந்துவிடுவார் என ஜோசியத்தில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், லியோ படத்தின் விஜய்யுடன் திரிஷா எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு, என் பொண்டாட்டி திரிஷா மேல உன் சுண்டு விரல் படக் கூடாது சொல்லிட்டேன்.
நீ மானம் மரியாதை போய் சாகப் போற பாரு என மிகவும் கொச்சையான வார்த்தைகளால் நடிகர் விஜய்யை திட்டியிருப்பது மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இதனிடையே, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிப்பை தாண்டி திரிஷாவுக்கு அரசியலில் நல்ல ஸ்கோப் இருக்கு என்றும், என்வார்த்தை திருவார்த்தை எனவும், 2023ல் திரிஷா தான் தமிழகத்தில் முதலமைச்சர் என்று ஸ்ட்ராங்காக தெரிவித்திருக்கிறார். இதற்கு பலர் பைத்தியமா என்று கிண்டலடித்தும் திட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.