உலகம் முழுவதும் இருக்க கூடிய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் பயன்படுத்த கூடிய சமூக வலைதள பக்கம் தான் ட்விட்டர்.
இந்த ட்விட்டரை கடந்த ஆண்டு தொழிலதிபர் எலோன் மஸ்க் வாங்கினார். இந்த நிலையில், இதில் ப்ளூ டிக் பெரும் பயனர்கள் சந்தா கட்ட வேண்டும் என்று அறிவித்து இருந்த நிலையில், இந்நிறுவனம் கோலிவுட் பிரபலங்களான திரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ப்ளூ டிக்கை நீக்கி உள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது திரிஷா மற்றும் ஜெயம் ரவி இவர்கள் இருவரும் இணைந்து தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்து உள்ளனர். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வேலை முடிந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த படத்தில் திரிஷாவின் பெயர் ‘குந்தவை’ என்பதால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குந்தவை என தன் பெயரை மாற்றி உள்ளார். மேலும் ட்விட்டரின் புதிய விதிப்படி பிரபலங்கள் தங்கள் பெயரை மாற்றினால் அவர்களது ப்ளூ டிக் பறிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
இதனிடையே, திரிஷாவின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் மீண்டும் தன் பெயரை பழையபடியே மாற்றியுள்ளார் திரிஷா. ஆனாலும் அவருக்கு இன்னும் ப்ளூ டிக் கொடுக்கப்படவில்லை.
இதனிடையே, ஜெயம் ரவியும் தன் பெயரை அருண்மொழி வர்மன் என மாற்றியுள்ளதால் அவரது ப்ளூ டிக்கும் பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.