இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் லோகேஷ் கனகராஜ்.. வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
14 March 2023, 7:30 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார்.

இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

பின்னர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது.

இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இதற்காக காஷ்மீருக்கு படக்குழு அண்மையில் சென்றிருந்தது.

இந்த நிலையில் இன்று லோகேஷ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாள் முன்னிட்டு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

logesh -updatenews360
  • sun pictures announced allu arjun atlee magnum opus project VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..
  • Close menu