அடிச்சு தூக்கு மாமே…’குட் பேட் அக்லி’ வைப் ஸ்டார்ட்..!

Author: Selvan
22 February 2025, 9:04 pm

அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி

நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு திருப்திபடுத்தாத நிலையில்,தற்போது ரசிகர்களின் பார்வை முழுவதும் குட் பேட் அக்லி படத்தின் மீது உள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில்,இன்று படத்தின் முக்கிய அப்டேட் 7.03க்கு வெளியாகும் என முதலில் தெரிவித்திருந்தது,ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே முதலில் கிடைத்தது,தொழில்நுட்ப பாதிப்பால் அந்த அப்டேட்டை 8.02க்கு மாற்றியது.

இதையும் படியுங்க: நான் என்ன அவ்ளோ மோசமாகவா நடிக்கிறேன்…ராயன் பட நடிகர் வேதனை.!

அதன்படி தற்போது படக்குழு படத்தில் ஹீரோயினாக நடிக்கின்ற த்ரிஷாவின் கதாபாத்திரத்தின் பெயரை ரம்யா என்று அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது,அதுகூடவே படத்தின் ரிலீஸ் தேதியும் ஏப்ரல் 10 என்று உறுதிசெய்துள்ளது.

குட் பேட் அக்லி ரிலீஸ் ஆகும் தேதி 10 என்பதால் படக்குழு படத்தின் அப்டேட்டை கூட்டுத்தொகை 10 வர மாதிரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது,காரணம் முதலில் 7.03 என்றும் அதன் பிறகு 8.02 என்றும் அறிவித்தது,இதனுடைய இரண்டு கூட்டத்தொகையும் 10 என்பதால்,இனி வரக்கூடிய நாட்களிலும் படக்குழு இதை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!