சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிகை திரிஷா.. அப்போ படம் வேற லெவல்ல இருக்குமே..!
Author: Vignesh12 December 2023, 10:30 am
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை திரிஷா. சமீபத்தில் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் லோகேஷ் இயக்கத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அடுத்தடுத்து, வாய்ப்புகளும் இவருக்கு வந்து கொண்டிருக்கிறது.
லியோ படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி கமலஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் Thug Life உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதனிடையே, முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவுடன் ரேப் சீன் லியோ படத்தில் இல்லை என்று மோசமாக விமர்சித்து இருந்ததை கண்டித்து திரிஷா ஒரு பதிவினை பதிவிட அதற்கு பல நட்சத்திரங்கள் திரிஷாவுக்கு ஆதரவாக மன்சூர் அலிகானுக்கு எச்சரிக்கை விடுத்தப்படி கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
முன்னனதாக, தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியும் திரிஷாவுக்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்து ஒரு கருத்தினை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், மன்சூர் அலிகான் த்ரிஷாவை எதிர்த்து புகார் அளித்திருந்தார்.
ஆனால், மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சுக்கு நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உணர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதற்குப் பின் மன்சூர் அலிகான் அந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பும் கேட்டு விட்டார்.
இந்நிலையில், நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக பேசிய நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வம்பர என்ற படத்தில் முக்கிய ரோலில் திரிஷா கமிட்டாகி இருக்கிறார். 17 ஆண்டுகள் பின்னர் சிரஞ்சீவிப்பு ஜோடியாக த்ரிஷா நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது கடைசியாக 2006 ஸ்டாலின் என்ற படத்தில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கிருஷ்ணன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.