நயன்தாரா, அனுஷ்கா நீங்க ஓரமா போங்க… பட வாய்ப்பை தட்டி பறிக்கும் திரிஷா..!

Author: Vignesh
15 September 2023, 1:45 pm

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், ரஜினி, கமல், அஜித், விஜய், ஆகிய நான்கு பேரின் படங்களிலும் நடிக்க த்ரிஷா கமிட் ஆகி இருக்கிறார். மார்க்கெட்டை இழந்த நிலையில், பொன்னியின் செல்வன் படம் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை ஸ்ட்ராங்காக்கி உள்ளார். அப்படி விஜயின் லியோ படத்தில் நடித்தும் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் கமலஹாசனின் KH234 படத்திலும் நடிக்கமிட்டாக இருக்கிறார். ஏற்கனவே, ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்துள்ளார். ஒரே சமயத்தில் அப்படி டாப் மார்க்கெட் அதிகம் உள்ள நடிகர்களின் படங்கள் திரிஷா மட்டுமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரஜினி, விஜய், அஜித் படத்தில் மட்டுமே நடிகை நயன்தாரா அனுஷ்கா நடித்திருக்கிறார்கள். அதேபோல், இந்த வாய்ப்பு நடிகை சமந்தா, தமன்னாவுக்கு கூட கிடைக்கவில்லை. மேலும், தனுஷ் சல்மான்கான் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாகவும் த்ரிஷா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 406

    0

    0