அரசியலில் இறங்கி CM-ஆக ஆசை…விஜய்க்கு ஷாக் கொடுக்கும் திரிஷா…வைரலாகும் வீடியோ..!
Author: Selvan4 January 2025, 5:55 pm
நிறைவேறுமா த்ரிஷாவின் அரசியல் ஆசை
தென்னிந்திய சினிமாவின் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா.இவர் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளை கடந்து சினிமாவில் பயணித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் பல வருடங்களுக்கு முன்பு நான் அரசியலில் இறங்கி முதலமைச்சர் ஆகுவேன் என்று பேசிய வீடியோ,தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: நடிகர் பிரபாஸ் திருமணம் செய்யாமல் இருப்பது எதனால் தெரியுமா…அவர் அம்மா சொன்ன தகவலால் ரசிகர்கள் ஷாக்..!
திரிஷா தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் தொழில்நுட்ப காரணங்களால் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளனர்.மேலும் அவர் நீண்ட வருடத்திற்கு பிறகு சூர்யா கூட இணைந்துள்ளார்.இப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திரிஷா ரொம்ப நாளாவே முதலமைச்சர் கனவுல இருக்காங்க போல.🤧🤧🤧 pic.twitter.com/V5FLvun4pm
— காக்கா (@Kaka_offic) January 4, 2025
இந்த நிலையில் அவர் முதலமைச்சராக இருக்க ஆசைப்படுகிறேன் வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் பேசாமல் நீங்களும்,விஜயும் கூட்டணி வச்சுக்கோங்க என நெட்டிசன்கள்,அந்த பழைய விடீயோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.