இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!
Author: Selvan30 March 2025, 5:01 pm
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகை த்ரிஷா பச்சை நிற பட்டுப்புடவை,மூக்குத்தி,மல்லிகைப்பூ அணிந்து எடுத்த ஒரு அழகான புகைப்படத்தை தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.மேலும் “Love Always Wins” என்ற கேப்ஷனும் போட்டுள்ளார்.
இதையும் படியுங்க: AK ‘God Bless U’ மாமே..அட்டகாசமாக வெளிவந்த Second லிரிக் வீடியோ.!
இதனை பார்த்த ரசிகர்கள் “உங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.பலர் வாழ்த்துகளையும் தெரிவித்து வர,சிலருக்கு இது போட்டோஷூட்டுக்காக எடுத்த புகைப்படமா அல்லது புதிய படத்திற்காக எடுத்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
41 வயதாகும் த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.கடந்த காலத்தில் வருண் மணியனுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நடக்கவில்லை.
Love always wins💚 pic.twitter.com/eLjiFPLVOO
— Trish (@trishtrashers) March 29, 2025
அதன்பிறகு அவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் எந்த உறவும் திருமணமாக முடிவடையவில்லை.
த்ரிஷாவின் இந்த பதிவு உண்மையில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியதா,இல்லை ஏதாவது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்று ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.