நெருங்கி வந்த நயன்தாரா… விட்டுக்கொடுக்காத த்ரிஷா: எல்லாம் அந்த நடிகரால் தான்..!
Author: Vignesh15 December 2023, 4:15 pm
பொதுவாக தென்னிந்திய சினிமாவில் இருக்கக்கூடிய நடிகைகள் டாப் இடத்தை பிடிக்க எந்த அளவிற்கும் செல்ல தயாராக இருப்பார்கள். அப்படித்தான் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் டாப் நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்ள நயன்தாரா பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.
தனக்குத்தானே போட்டி என்று கூறும் அளவிற்கு பல படங்களில் தற்போது, நடித்த வருகிறார். அவருக்கு அடுத்ததாக நடிகை சமந்தா இடம் பிடித்து வந்தார். நயன் மற்றும் சமந்தா இருவரின் பேச்சுக்கள் தான் தென்னிந்திய சினிமாவை தாண்டி பாடிவிட்டிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது அதை உடைத்து நான் தான் நம்பர் ஒன் என்று நடிகை திரிஷா நிரூபித்திருக்கிறார். அந்த வகையில், பல பிரபல ஊடகமான மாதா மாதம் வெளியிடும் டாப் பிரபலங்களின் பட்டியலில் லிஸ்டில் நடிகை திரிஷாவை தேர்வு செய்திருக்கிறது.

மேலும், மோஸ்ட் பாப்புலர் பீமேல் தமிழ் ஃபிலிம் ஸ்டார் லிஸ்டிலும் நடிகை திரிஷா தான் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் நயன்தாராவும் மூன்றாம் இடத்தில் சமந்தாவும் இடம் பிடித்து இருக்கின்றனர். இதற்கு, முக்கிய காரணம் சமீபத்தில், விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் தான் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
