தல அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகழ் திருமேனி இயக்கிவரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது. இந்த பிப்ரவரி மாதம் இறுதி வரை இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என தகவல் வெளியாகியது.
ஆனால், இதுவரை இப்படத்தை குறித்த எந்த ஒரு அப்டேட்டும் பெரிதாக வராததால் அஜித் ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரையும் குஷி படுத்தும் வகையில் தற்ப்போது அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே 63 படத்தின் மாஸான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
ஆம், நடிகர் பிரபுவின் மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் அவருடைய டீம் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் முடிவில் அல்லது ஏப்ரல் மாதம் துவக்கத்தில் ஆரம்பம் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்காக அஜித் ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராததால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஒரு வேலை அஜித் சரியாக ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்தடித்ததால் படப்பிடிப்பு தள்ளி செல்கிறதா என கேள்வி எழுப்பப்படும் நேரத்தில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து நிதி நெருக்கடி இருப்பது தான், படப்பிடிப்பு தாமதம் ஆவதாக சொல்லப்படுகிறது.
ஷூட்டிங்கிற்கு ஒரு நாளைக்கு தயாரிப்பு செலவு மட்டுமே ரூ. 50 லட்சம் ஆகிறதாம். இதனால் தயாரிப்பு நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறதாம். இதனால் அஜித் விடாமுயற்சி படத்தை அப்புறப்படுத்திவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் துவங்கவுள்ள படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இப்படியான நேரத்தில் சற்றுமுன் கிடைத்த தகவலின் படி , திரிஷா விடாமுயற்சி படத்தில் இருந்து .விலகிக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கூறுகிறது. காரணம், விடாமுயற்சி படத்தின் அடுத்த ஷெட்யூல் தொடங்க மேலும் தாமதம் ஆகும் சூழல் நிலவுகிறதாம். இதனால் திரிஷாவுக்கு கால்ஷீட் இடிக்கிறதாம். விடாமுயற்சி படத்தை தாண்டி கமல் ஹாசன் உடன் தக் லைஃப், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருக்கும் அவர் விடாமுயற்சி படத்துக்கும் தேதி ஒதுக்கியும் அது தொடர்ந்து தள்ளிப்போனதால் தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் கால்ஷீட் பிரச்சனை ஏற்படுகிறதாம்.
இப்போதைக்கு தக் லைஃப், விஸ்வம்பரா படத்துக்கான தேதிகள் மட்டுமே திரிஷாவிடம் இருப்பதால்; விடாமுயற்சி படத்தில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தாராம். அதன் பின்னர் அஜித் தான் நேரடியாக திரிஷாவிடம் பேசி சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. பின் மனம் மாறிய திரிஷா கமல் ஹாசனின் தக் லைஃப், விஸ்வம்பரா உள்ளிட்ட திரைப்படங்களின் ஷெட்யூல் முடித்துவிட்டு விடாமுயற்சி ஷெட்யூலுக்கு அவர் ஒத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…
தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…
விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
This website uses cookies.