கண்டீஷன் மேல் கண்டீஷன் போட்டு கடுப்பேத்தும் அஜித்? திரிஷாவுக்கு பதில் இவரா?

Author: Shree
28 July 2023, 6:20 pm

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

vidamuyarchi

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருந்தனர். ஆனால், அவரோ அதை பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் தொடர்ந்து சுற்றுலா சென்று ஜாலியாக இருந்து வருகிறார். விடாமுயற்சி படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 18ம் தேதி துவங்க உள்ளது. இதனிடையே அஜித் இயக்குனருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பல கண்டீஷன்ஸ் போட்டு நிறைய மாற்றங்கள் செய்து வருகிறாராம்.

Tamannaah -updatenews360

அந்தவகையில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிகை திரிஷா ஹீரோயினாக நடிக்கவிருந்த நிலையில் அவரை மாற்றிவிட்டு தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனராம். காரணம் ஜெயிலர் படத்தின் மூலம் தமன்னாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால் அது படத்தின் வெற்றிக்கு உதவும் என திட்டமிட்டு இந்த திடீர் மாற்றம் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவை வேண்டாம் என அஜித் கூறியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 587

    2

    2