“கோட்” படத்தில் ஐட்டம் குத்தாட்டம் போட்ட திரிஷா… எல்லாம் விஜய்க்காக தானாம்!

Author:
5 August 2024, 4:09 pm

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் “கோட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்கிற இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அப்பா மகள் என இரட்டை ரோல்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்கள்.

Vijay - Updatenews360

இவர்களுடன் மோகன், நடிகர் பிரசாந்த், மைக் மோகன் , பிரபுதேவா , ஜெயராம் , கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய் படத்திற்காக இசையமைக்கிறார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் மூன்றாவது பாடலான “ஸ்பார்க்” வெளியாகியது.

Goat

இந்த மூன்று பாடல்களுமே ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை தான் பெற்றுள்ளது. முன்னதாக வெளிவந்த விஜய் படத்திற்கு இருந்த வரவேற்பு இந்த பாடலுக்கு கிடைக்கவில்லை. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் வேலையில் தற்போது படத்தை குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்றை பிரபல பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது திரிஷா… விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் அவர் கேட்டுக்கொண்டதால் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறாராம். இதுவரை திரிஷா எந்த ஒரு பாடலுக்கும் தனியாக குத்தாட்டம் போட்டதே இல்லை. சமந்தா பாணியில் அடுத்தது ஒரு ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா ரேஞ்சுக்கு திரிஷாவின் கவர்ச்சி ஐட்டம் டான்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
,

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!