என்னங்க சொல்றீங்க? த்ரிஷா படைத்த உலக சாதனை.. ஆனால் ‘அது’..!
Author: Hariharasudhan20 March 2025, 9:42 am
த்ரிஷா, மகேஷ் பாபு நடிப்பில் வெளியான அத்தடு படம் 1,500 முறை சேனலில் ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
சென்னை: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, த்ரிஷா நடித்து வெளியான தெலுங்கு படம் ‘அத்தடு’. த்ரி விக்ரம் நிவாஸ் இயக்கிய இந்தப் படம், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கமர்ஷியல் மசாலா கதையாக வெளியானது. மேலும், இது தமிழில் ‘நந்து’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் படம் ஸ்டார் மா சேனலில் இதுவரை ஆயிரத்து 500 முறை ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது. ஆனால், வேறு எந்தப் படமும் உலகளவில் இத்தனை முறை ஒளிபரப்பானதில்லை எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், த்ரிஷா நடித்த இப்படம் உலக சாதனை படைத்துள்ளது.
மேலும், தற்போது த்ரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சிலம்பரசன், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

அதேபோல், அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்திலும் த்ரிஷா நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விண்டேஜ் மாஸ் லுக் அஜித்குமாரின் டீசர் காட்சிகள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாகிறது.
இதையும் படிங்க: காதல் கணவரை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் சிமெண்ட் போட்டு மூடிய மனைவி.. இறுதியில் யாரும் எதிர்பாரா சம்பவம்!
முன்னதாக, த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், திரையில் த்ரிஷாவின் பொலிவு ரசிகர்களை கிறங்கச் செய்தது எனலாம்.